Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

தன்னம்பிக்கை

சட்டை பையில் இருந்த இரண்டு ரூபாய் நாணயம்

அலமாரியின் மூலையில் கிடந்த ஐந்து ரூபாய் நாணயம் என

கையில் இருந்த எல்லா சில்லறையையும் போட்டு வாங்கினேன்

ஒரு உண்டியல்.

Advertisements

சந்திப்பு

வருடம் பல கழித்து ஒன்று சேர்கையில்……!!!  

பகிர்ந்து கொள்ள ஆயிரம் விஷயம் இருந்தும்                                                                                                         நேரில் பார்க்கும் போது வார்த்தைகள் தடுமாறுகின்றன
எதை சொல்ல எதை விட என்று தெரியாமல்…. ????#$@ 

எல்லாவற்றையும்  பகிர்ந்து விட வேண்டும்  என்று                                                                                                மனம் துடித்தாலும், எதில் ஆரம்பித்து                                                                                                                             எதில்  முடிக்க என்று  அறியாமல்  குழப்பம்…. !!!!! 

என்னவளே,  என் செய்வேன் ????

கல்லூரி வாழ்க்கை

பிறந்த குழந்தையை அரவணைக்கும் தாயைப்போல
நம்மை அரவணைத்த நம் கல்லூரி விடுதி


முதலாண்டில் கழுகாய் நம்மை கொத்திச்
செல்ல முயன்ற சீனியர் மாணவர்கள்

நம்மை Albert Einstein-களாக மாற்ற
முயன்ற புரொபஸர்கள்


நம்மை கட்டுக்கோப்புடன் நடத்த முயன்று
வெற்றிக்கனியை பறிக்காத விடுதி Warden


பரீட்சைக்கு முந்தைய இரவு நாம் நடத்திய
பட்டிமன்றங்கள் மற்றும் அரட்டை அரங்கங்கள்


வெட்டிக் கதைகளும் இணைய தளமுமாக
நாம் கழித்த அர்த்தமற்ற சிவராத்திரிகள்


நல்ல உணவிற்காக பொறுத்து பின்
போராடி மாற்றிய உணவு விடுதி


சனி ஞாயிறுகளில் பல்கூட துலக்காமல்
நாம் உண்ணும் ‘மயக்க’ பிரியாணி


கூட்டம் கூட்டமாக ஒரே அறையில் நாம்
கண்டுகளித்த வண்ணமயமான திரைப்படங்கள்


ஒராண்டு முடிந்ததும் பழிவாங்கும் படலமாக
நம் Juniors-ஐ நாம் படுத்திய பாடு
பொறுப்பற்று சுற்றிய நம்மை ஆறு மாதத்திற்கு
ஒருமுறை நெறிப்படுத்திய Semester Exam


வீட்டிற்கு செல்ல அங்கங்கே நாம்
ஒதுக்கும் ‘சின்னஞ்சிறு’ விடுமுறைகள்


உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் Cellphone-ல்
விடிய விடிய நாம் ‘வறுத்த’ கடலைகள்


எப்போதுமே கடைசி நாளில் நாம்
சமர்ப்பிக்கும் Recordகள், Assignment-கள்


நிலஅதிர்ச்சியாலும் சுனாமியாலும்கூட அசைக்க முடியாத
நம்மை அதிர வைத்த Anna University Result-கள்
நாமிட்ட தேவையற்ற சச்சரவுகளும் அதில்
இருந்து கற்ற கசப்பான பாடங்கள்


விடுதியின் குறுகிய நடைபாதையில் நாம்
விளையாடிய Cricket மற்றும் Football


நள்ளிரவில் ஆள் அரவமில்லாத சாலைகளில்
காற்று வாங்க நாம் சென்ற Walking-கள்


தினந்தோறும் வகுப்பிற்கு லேட்டாக சென்று
நாம் ‘maintain’ செய்த Punctuality


ஆயிரம் அடித்துக் கொண்டாலும் கடைசியில்
ஒற்றுமையாக நாம் நடத்திய Symposium


Placement-ல் நம் வேலைக்கு வேட்டு வைத்த/வைக்க
முயன்ற நாம் வைத்த “கப்பு”கள்


கஜினி முகமது போல வேலைக்காக விடாமுயற்சியுடன்
நாம் ஏறி இறங்கிய Company-கள்


மூன்றே மாதங்களில் முடிக்க வேகவேகமாய்
நாம் செய்து ‘வாங்கிய’ Project-கள்


போருக்கு வியூகம் அமைப்பது போல்
அமைத்து நாம் அடித்த Mass Bunk-கள்


உலகம் சுற்றும் வாலிபர்களாக நாம்
சுற்றிக் களித்த வட இந்திய சுற்றுலா


வகுப்புக்கு மட்டம் போட தினமும் Technique-ஆக
நாம் கொண்டாடிய Birthday / Batchday-கள்


வைத்திருக்கும் எல்லா Equipment-யும்
பொசுக்கி நாம் செய்த Lab வகுப்புகள்


Arrear உறுதியானாலும் தன்னம்பிக்கையோடு
நாம் நிரப்பும் 44 பக்க விடைத்தாள் என்று எல்லாமே
இப்போது திரும்பி பார்த்தால் “குறும்பு” செய்தது
போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும் இவையெல்லாம்
தான் எனக்கு “வாழ்க்கையை” சொல்லி கொடுத்தது.

பள்ளிக்கூடம்

Old Scool Building

பாழடைந்த கட்டிடங்கள் செல்லரித்த கதவுகள்
வேரருந்த மரங்கள் சுருங்கிய நிலப்பரப்பு
என்றனைத்தும் முதுமையை உமிழ்ந்தாலும் – அன்று
பூத்த புதுரோஜா போல பூத்தம் புதிதாக
நமது நட்பும் நினைவுகளும……

Lips.jpg

நீரில் மின்சாரம் இருப்பதை உணரத்

தொடங்கினேன் – நீ உன் இதழ்கள்
பதித்து கொடுத்த முதல் முத்தத்திலிருந்து… !!!

என் இதயமே…

pro2.jpg

என்னவளே ! என் இதயம் முழுவதும்
உன்னை பலமுறை தேடினேன் – என்
இதயமே நீயென்பதை உணராமல் !!!

மழைத்துளி

raindrop_s.jpg

அனுமதி கேட்கவும் இல்லை…

கொடுக்கவும் இல்லை…

வலுக்கட்டாயமாய் முத்தம் … ?

மண்ணில் விழுந்த மழைத்துளி !!!