
என்னவளே ! என் இதயம் முழுவதும்
உன்னை பலமுறை தேடினேன் – என்
இதயமே நீயென்பதை உணராமல் !!!
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
April 25, 2007 Vickram ஆல்

அனுமதி கேட்கவும் இல்லை…
கொடுக்கவும் இல்லை…
வலுக்கட்டாயமாய் முத்தம் … ?
மண்ணில் விழுந்த மழைத்துளி !!!
எஸ்.எம்.எஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
April 25, 2007 Vickram ஆல்
மனதை எங்கோ பறிகொடுத்துவிட்டு
இஙகு வந்து புலம்புகிறேன்
கவிதைகள் என்று !!!
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
April 24, 2007 Vickram ஆல்

நீ நிஜத்தின் போர்வையா ? இல்லை
மாயையின் கோர்வையா ?
பிறப்பிலிருந்து எனைத் தொடரும்
நிழலே, என் இருண்ட கணங்களில்
மறைந்து விடுகிறாயா அல்லது
என் கண்களுக்கு அப்பால் எனை
தொடர்கிறாயா ???
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
April 24, 2007 Vickram ஆல்

நேரத்தை நிறுத்த முடியாதென்று
யார் கூறியது ? என் நேரம் நின்று
தான் போய்விடுகிறது – உன் குரலுக்காக
தொலைபேசியில் காத்திருக்கும் அந்த
சில விநாடிகளில்….. !!!
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »